கலைமாமணி டாக்டர்
ஜி. உமாபதி
விடாமுயற்சி – தன்னம்பிக்கை
Kalaimaamani
Dr.G.Umapathy
Self Confidence & Hard Work
கலைமாமணி டாக்டர்
ஜி. உமாபதி
விடாமுயற்சி – தன்னம்பிக்கை
Kalaimaamani
Dr.G.Umapathy
Self Confidence & Hard Work
102nd Birthday – 5th July 2022
of
Kalaimaamani
Dr.G.Umapathy
1920 – 1995
A self made man with multi faceted personality
Freedom Fighter / Orator / Writer / Author / Publisher / Printer / Theatre Owner / Film Producer / Actor / respected by Political Leaders
விடுதலைப் போராட்ட வீரர், நூல் ஆசிரியர், பதிப்பாளர் சிந்தனையாளர், பேச்சாளர், சினிமா தயாரிப்பாளர், ஆனந்த் திரையரங்கு உரிமையாளர், மாநகராட்சி மன்ற உறுப்பினர், நடிகர், அரசியல்
என பன்முகத் தன்மை கொண்டவர் ஆன கலைமாமணி டாக்டர் ஜி உமாபதி அவர்களின் நூற்றி இரண்டாவது (102) பிறந்தநாள் நாள் 5 ஜூலை 2022.
Please use the contact form for giving your tributes to the great Kalaimaamani Dr.G.Umapathy
Kalaimamani Dr. G. Umapathy (1920-1995)
Centenary Year Valedictory on 4th July 2021
கலைமாமணி டாக்டர் ஜி உமாபதி அவர்களின் நூற்றாண்டு காலத்தில் அவருடன் பழகியவர்களின் நினைவலைகள்
நூற்றாண்டு விழா துவக்கம் 5 July 2020
நூற்றாண்டு விழா நிறைவு 4th July 2021
ஜி உமாபதி அவர்களின் 100வது பிறந்த நாள் அன்று (5th July 2020) அவர் குடும்பத்தினரிடமிருந்து வந்த நினைவலைகள்
அன்புள்ள அப்பா !
அன்புள்ள அப்பா கலைமாமணி டாக்டர் ஜி. உமாபதி அவர்கள் நூற்றாண்டு விழா 05.07.1920 – 05.07.2020
வாழ்ந்து பார்க்க வேண்டும் – அறிவில்
மனிதனாக வேண்டும்
வாசல் தேடி உலகம் – உன்னை
வாழ்த்திப் பாட வேண்டும்…
கவியரசரின் கவிதை வரிகள்
ஒரு மனிதனை அடையாளம் காட்ட வேண்டும் எனில் எங்கள் கண் முன்னே வருபவர் எங்கள் தந்தை கலைமாமணி டாக்டர் ஜி. உமாபதி அவர்கள்.
இளமைக்காலம், கல்வி
வெற்றிதனைக் கண்டவர் எங்கள் தந்தையார் ஜி. உமாபதி அவர்கள்.
இவரது இளமைக் கால வாழ்க்கையில் இன்னிசை கீதம் இசைத்ததில்லை, தேனிலவின் குளிர்ச்சியில் தென்றல் தாலாட்டு பாடியதில்லை, கடுமையான சூழல்களில் தடைகளையும் தடுப்புகளையும் தாண்டி, வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தவர் எங்கள் தந்தையார்.
உழைப்பும் உயர்வும்
உண்மை நிலை அதுதான் என்பதை உணர்ந்து நான் இதை பதிவு செய்கிறேன். எளிமையாக துவக்கப்பட்ட குடும்ப வாழ்க்கையில், தான் பெற்ற செல்வங்களை அரவணைத்து பாதுகாத்து, கல்வி, நல்லொழுக்கம், உழைப்பு ஒன்றே இறைவனை மனம் மகிழ வைக்கும் செயல்பாடு” என்ற மந்திர உபதேசத்தை, தன் மக்களுக்கு போதித்து வளர்த்த காலம்.
தன்னைச் சுற்றி வாழ்கின்ற மக்கள் படுகின்ற துயரங்களை களைகின்ற விதமாக பொது வாழ்க்கையில் தன்னை இணைத்துக் கொண்டவர். 1958/62 களில் சென்னை மாநகராட்சி கவுன்சிலராக மக்களால் விரும்பி தேர்வு செய்யப்பட்டு பொது நலப்பணிகளில் தன்னை முழுதாக ஈடுபடுத்திக் கொண்டார் அப்போது வணக்கத்திற்கு உரிய சென்னை மேயராக இருந்த திருமிகு முனுசாமி அவர்களுடன் ருஷ்ய நாட்டிற்கு அரசின் சார்பில் சென்று சிறப்பினைப் பெற்றவர் எங்கள் தந்தையார்.
அவரது அயராத உழைப்பால் தான் வாழ்ந்த காலத்தில் சுற்றி இருந்தவர்களால் நன்கு அறிந்து பாராட்டுதல்களைப் பெற்றார்.
காலம் தனது பயணத்தில் ஒரு சிலரை அடையாளம் காட்டுகிறது. எங்கள் தந்தையார் ஜி. உமாபதி அவர்களும் காலத்தினால் அடையாளம் காட்டப்பட்ட வராக வாழ்ந்தார் என்பதில் நாங்கள் பெரு மகிழ்வு கொண்டோம்.
தொழில் வளர்ச்சி !
மொழிப்பற்று...
வடசென்னை பகுதியில் தனது வாழ்க்கையை துவக்கியவர்.
குடும்பத் தலைவரின் பொறுப்பினை உணர்ந்து எங்களுக்காக கீழ்ப்பாக்கம் பகுதியில் ஹார்லேஸ் சாலையில் இடத்தை வாங்கி, அழகான ஒரு வீட்டைக்கட்டி அதில் எங்களை அமர்த்தி அழகு பார்த்தார்.
அரசியல் ஈடுபாடு.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது எல்லைப் பிரச்சினைகள் தலைவிரித்து ஆடிய தருணத்தில் தேவிகுளம் , பீர்மேடு மீட்டெடுக்க நடந்த போராட்டத்தில் தமிழரசு கழகத்தின் முன்னிலையில் தன்னை நிறுத்திக் கொண்டவர் எங்களின் அப்பா என்பதில் மகிழ்ச்சி அடைந்தோம்.
தமிழகத்தின் வடக்கு எல்லையான திருப்பதி உடன் திருத்தணியும் ஆந்திர மாநிலத்திற்கு சேர்ந்துவிடும் என்ற நிலையில் போராட்ட களம் கண்ட தமிழரசுக் கழகம் மா. பொ. சியின் தலைமையில் திருத்தணிகை திருத்தலத்தை மீட்டெடுத்து தமிழகத்தோடு சேர்த்த சரித்திர பெருமைதனை பெற்ற தமிழரசு கழகத்தின் போர்ப்படைத் தளபதியாக போராட்டக் களம் கண்டவர் எங்கள் தந்தையார்.
திருத்தணி கையும் ஆந்திர மாநிலத்திற்கு சென்றுவிடாமல் தமிழ் கடவுள் வாழ்கின்ற ஆறுபடை வீடுகளில் ஒன்றான, திருத்தணிகையை, தமிழகத்துக்கு பெற்றுத்தந்த பெருமை பெற்ற தமிழரசு கழகத்தின் தலைவர் சிலம்புச் செல்வர் ம. பொ. சியின் துணையாய் உடனிருந்து செயலாற்றியவர் ஜி. உமாபதி அவர்கள்.
எத்தனை போராட்டங்கள் எத்தனை தடைகள் வாழ்க்கையை அதன் போக்கில் சென்று மனம் தளராத முயற்சியில்,கடின உழைப்பில் வெற்றிக்கனிகளைப் பரித்தவர் என்ற சிறப்பினை பெற்றவர் எங்கள் தந்தையார்.
பெருந்தலைவருடன் நட்பு...
தடம் மாறாத வாழ்க்கையில் செயல்பாடுகள் சிறப்புடன் இருக்க பலர் மதிக்க தனது அரசியல் வாழ்க்கையை செம்மைப் படுத்திக் கொண்டார். காலச்சக்கர சுழற்சியில் எங்கள் குடும்ப விழாக்களில் எந்த ஒரு நிகழ்ச்சி ஆனாலும் அப்பாவின் அழைப்பை ஏற்று சிறப்பித்தார் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்.
திரை உலகம்
தமிழக தொழில் அமைச்சராக இருந்த “தொழிற்பேட்டைகளின் தந்தை” மாண்புமிகு ஆர். வெங்கட்ராமன் அவர்கள், திறப்பு விழாவினை சிறப்பித்தார்கள் என்பது வரலாறு.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நட்பு முறையில் விருப்பத்தை அறிந்து பின்னர் சாந்தி, நடிகர் திலகத்திற்கு உரிமையாக, ஆயிரம் விளக்கு பகுதியில் “ஆனந்த்” பிரம்மாண்டமானதமிழகத்தின் முதல் அகல திரை (70 எம் எம்.) கொண்ட திரையரங்கை கட்டி பெருமை பெற்றார் எங்கள் தந்தையார்.
தமிழக ரசிகர்களையும் திரைத்துறை சேர்ந்தவர்களை யும் மகிழ்ச்சி கொள்ள வைத்தது ஆனந்த திரையரங்கு.
திரையரங்கு உரிமையாளர் சங்கத்தில் பொதுச் செயலாளராக, திறம்பட செயல்பட்ட “திரையுலக தந்தை “ஐயா டி. ராமானுஜம் அவர்களுடன் சகோதர பாசத்துடன் பழகி அதன் வளர்ச்சிக்கு இறுதிவரை உடனிருந்து செயல்பட்டவர் அப்பா.
அரசியல், சினிமா, பொதுவாழ்க்கை இந்த நெடிய பயணத்தில் நிலைத்து நிற்கும் அடையாளங்கள் அவர் பெயரை சொல்ல வைத்தன. நடிகர் திலகத்துடன் ஆன பாச உணர்வு அவரது இயல்பான நடிப்பு கலை சேவையில் அவரது பற்று ஆகியவற்றால் நெகிழ்ந்து போன,எங்கள் அப்பா,தஞ்சை தமிழ் மண்ணின் வரலாற்று நாயகன் “ராஜராஜசோழன்” திரைக்காவியத்தை தென்னகத்திலேயே முதன்முதலாக (சினிமாஸ்கோப்) அகன்ற திரையில் நடிகர் திலகத்தை ராஜராஜ சோழனாக வலம் வர வைத்தவர் எங்கள் அப்பா.
இயல்பான அப்பாவின் போக்கை கவனித்து வந்த இயக்குனர் மணிரத்தினம் தனது இயக்கத்தில் “அக்னி நட்சத்திரம்” என்ற திரைப்படத்தில் நடிக்க வைத்து பெருமையுற்றார். அப்பா நடித்த, முதல் படத்திலேயே படம் பார்த்தவர்கள் அனைவரின் பாராட்டுதல்களை யும் பெற்றார். இளமைக்காலத்தில் நாடக மேடைகளில் நடித்து அனுபவம் பெற்றவர்க்கு திரைப்படத்தில் நடித்து பெயர் பெறுவது எளிதாகிப் போனது. சினிமா துறையில் பெயர் பெற்ற பெரிய திரைப்படங்கள் தயாரித்து மக்களுக்கு விருந்தாக்கிய வர்களின் நட்பைப் பெற்றவர். ஜெமினி திரைப்பட தயாரிப்பாளர், ஸ்டூடியோ அதிபர் திரு எஸ். எஸ். வாசன் அவர்கள், திருமிகு ஏ. வி. மெய்யப்ப செட்டியார் அவர்கள், விஜயா வாகினி உரிமையாளர் திருமிகு நாகிரெட்டி ஆகியோருடன் சிறந்த நட்பினை கொண்டிருந்தவர் எங்கள் அப்பா.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் மீது பற்று கொண்டவர். தமிழ் மொழி ஆர்வம் கொண்டு திருமிகு மு. கருணாநிதியுடன் திரைப்பட வசன எழுத்துக்களின் ஈர்ப்பில், அரசியல் செயல்பாடுகளில், அவருடனான நட்பும் அப்பாவிற்கு இருந்தது.
தமிழ்பற்றாளர்களுக்கு விருதுகள்..
அப்பாவின் தமிழ் பற்று, இலக்கியப் பொதுச்சேவை செயல்பாடுகளை கவனித்து வந்த தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் டாக்டர் மு. கருணாநிதி அவர்கள் “கலை மாமணி” தமிழக அரசின் சிறப்புப் விருதினை வழங்கி கௌரவித்தார்கள். அதன் பின்னர் “கலைமாமணி டாக்டர் ஜி. உமாபதி என்ற புகழ் பெயரோடு விளங்கினார். கலை ஆர்வம், தமிழ் மொழிப்பற்று கொண்டோருக்கு உரிய மரியாதையும் தமிழ் ஆர்வலர்களுக்கு விருதுகளையும் வழங்கி தனது மொழிப்பற்றினை அறிய வைத்தவர் வணக்கத்திற்குறிய எங்களின் அப்பா.
வாழ்க்கைப் பாதையில்....
சென்னை கிண்டி ரேஸ் கிளப் குதிரை பந்தயத்தில் ஆர்வலராகவும் சில காலம் இருந்த பின்னர் அதிலிருந்து விலகினார். காலத்தின் ஓட்டத்தில் ஒரு மனிதனின் முழு வாழ்க்கையையும் பதிவு செய்ய இயலுமா என்பது கேள்வி? மனிதன் தான் வாழ்ந்த காலத்தில் நல்ல படைப்புகளை மக்களால் மறக்கவே முடியாத அடையாளங்களை விட்டுச் சென்றால் அதுதான் காலத்திற்கும் பேசப்படும். அனைவரின் மனதிலும் பதிந்திருக்கும்.
எங்கள் தந்தையார் அவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் எங்களது மனதில் பதிந்திருக்கின்ற நினைவுகளின் பதிவாக, அவரது அன்பு நிறைந்த மாசற்ற உள்ளத்தை, மீண்டும் மனதின் நினைவுப் பக்கங்களையும் புரட்டிப் பார்க்கும் வகையில் எழுத்து வரிகள் இருப்பதாக நாங்கள் உணர்கிறோம்.
வாழ்ந்த காலத்தில் பல அரிய பெரிய சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் எங்கள் தந்தையாரின் பெருமைகளையும் சிறப்பான பகுதிகளையும் அவரோடு உடனிருந்து பழகியவர்கள் இன்றும் சொல்ல நாங்கள் கேட்டு வருகிறோம்.
நூற்றாண்டு விழா...
எங்களது தந்தையாரின் நூறாண்டு பயணம்
கலைமாமணி டாக்டர் ஜி.உமாபதியின் நூல்கள்
பயனுள்ள பரிசு
Audio Track 1 - 11
Track 1
Track 2
Track 3
Track 4
Track 5
Track 6
Track 7
Track 8
Track 9
Track 10
Track 11
ஜி உமாபதி யின் மூத்த மகளான பாரததேவியின் கவிதைகளின் தொகுப்பு
நினைவுகளோடு - பாரததேவி ஹரி
இன்னுயிர் தந்தையின் நினைவலைகள். உழைப்புக்கு ஜி. உமாபதி காலமகள் பெற்றெடுத்த கலைமகனே! காலமெல்லாம் இப்புவியில் களிப்போடு வாழ்ந்தவரே!கன்னித் தமிழ் புகழ் போற்றும் காவிய நாயகனே! தமிழ்போல் சுவையோடு எந்நாளும் வாழ்ந்தவரே ! 1995ஆம் ஆண்டு தந்தைக்கு 76 வயதில் இறுதியாக ஒரு வாழ்த்து மடல் எழுதினேன் அதை தந்தை பலமுறை படித்து, படித்து, பரவசமான வாழ்த்துமடல்
இன்று 25 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தைக்கு , கண்ணீர் அலைகளோடு சமர்ப்பிக்கிறேன்.
உழைப்பிலேயே உயர்ந்த நிலா!
வாழ்க்கையிலேயே சிறந்த நிலா !
உயர்விலே விண்நிலா!
குடும்பத்திலேயே வெண்ணிலா !
உருவத்திலே கருப்பு நிலா !
உள்ளத்திலே வெள்ளை நிலா !
நேர்மையிலே தூய்மை நிலா !
சொல்லிலே வாய்மை நிலா !
அறிவிலே தங்க நிலா!
ஆற்றலில் பண்பு நிலா !
எங்களுக்கு அன்பு நிலா !
குழந்தைகளுக்கு பாச நிலா !
அனைவருக்கும் வான் நிலா !
தன் வாழ்நாளெல்லாம் அயராது உழைத்த உழைப்பில்உயர்ந்த பொக்கிஷத்தை , தான் வளர்ந்த வரலாற்றை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு விட்டார் மாமேதை உமாபதி அவர்கள். அம்மணி, கண்ணே,அய்யனே , ராஜா, இனிய அமுதம் தந்தையின் “ரத்தத்தில்” பிறந்தவை ,தந்தையின் அருமைகளும் பெருமைகளும் சாதனைகளும் காலத்தால் அழியாதவை! என்றென்றும் நிலைத்து நிற்கும். தந்தையோடு நாங்கள் வாழ்ந்தநாட்களில் அந்த இனிய காலங்கள் இனி வருமா?.
நினைவுகளோடு; பாரததேவி ஹரி.
இளமைக்காலம், கல்வி
வெற்றிதனைக் கண்டவர் எங்கள் தந்தையார் ஜி. உமாபதி அவர்கள்.
இவரது இளமைக் கால வாழ்க்கையில் இன்னிசை கீதம் இசைத்ததில்லை, தேனிலவின் குளிர்ச்சியில் தென்றல் தாலாட்டு பாடியதில்லை, கடுமையான சூழல்களில் தடைகளையும் தடுப்புகளையும் தாண்டி, வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தவர் எங்கள் தந்தையார்.
நினைவுகளோடு - பாரததேவி ஹரி
இன்னுயிர் தந்தையின் நினைவலைகள். உழைப்புக்கு ஜி. உமாபதி காலமகள் பெற்றெடுத்த கலைமகனே! காலமெல்லாம் இப்புவியில் களிப்போடு வாழ்ந்தவரே!கன்னித் தமிழ் புகழ் போற்றும் காவிய நாயகனே! தமிழ்போல் சுவையோடு எந்நாளும் வாழ்ந்தவரே ! 1995ஆம் ஆண்டு தந்தைக்கு 76 வயதில் இறுதியாக ஒரு வாழ்த்து மடல் எழுதினேன் அதை தந்தை பலமுறை படித்து, படித்து, பரவசமான வாழ்த்துமடல்
இன்று 25 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தைக்கு , கண்ணீர் அலைகளோடு சமர்ப்பிக்கிறேன்.
உழைப்பிலேயே உயர்ந்த நிலா!
வாழ்க்கையிலேயே சிறந்த நிலா !
உயர்விலே விண்நிலா!
குடும்பத்திலேயே வெண்ணிலா !
உருவத்திலே கருப்பு நிலா !
உள்ளத்திலே வெள்ளை நிலா !
நேர்மையிலே தூய்மை நிலா !
சொல்லிலே வாய்மை நிலா !
அறிவிலே தங்க நிலா!
ஆற்றலில் பண்பு நிலா !
எங்களுக்கு அன்பு நிலா !
குழந்தைகளுக்கு பாச நிலா !
அனைவருக்கும் வான் நிலா !
தன் வாழ்நாளெல்லாம் அயராது உழைத்த உழைப்பில்உயர்ந்த பொக்கிஷத்தை , தான் வளர்ந்த வரலாற்றை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு விட்டார் மாமேதை உமாபதி அவர்கள். அம்மணி, கண்ணே,அய்யனே , ராஜா, இனிய அமுதம் தந்தையின் “ரத்தத்தில்” பிறந்தவை ,தந்தையின் அருமைகளும் பெருமைகளும் சாதனைகளும் காலத்தால் அழியாதவை! என்றென்றும் நிலைத்து நிற்கும். தந்தையோடு நாங்கள் வாழ்ந்தநாட்களில் அந்த இனிய காலங்கள் இனி வருமா?.
நினைவுகளோடு; பாரததேவி ஹரி.
நினைவுகளோடு - பாரததேவி ஹரி
இன்னுயிர் தந்தையின் நினைவலைகள். உழைப்புக்கு ஜி. உமாபதி காலமகள் பெற்றெடுத்த கலைமகனே! காலமெல்லாம் இப்புவியில் களிப்போடு வாழ்ந்தவரே!கன்னித் தமிழ் புகழ் போற்றும் காவிய நாயகனே! தமிழ்போல் சுவையோடு எந்நாளும் வாழ்ந்தவரே ! 1995ஆம் ஆண்டு தந்தைக்கு 76 வயதில் இறுதியாக ஒரு வாழ்த்து மடல் எழுதினேன் அதை தந்தை பலமுறை படித்து, படித்து, பரவசமான வாழ்த்துமடல்
இன்று 25 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தைக்கு , கண்ணீர் அலைகளோடு சமர்ப்பிக்கிறேன்.
உழைப்பிலேயே உயர்ந்த நிலா!
வாழ்க்கையிலேயே சிறந்த நிலா !
உயர்விலே விண்நிலா!
குடும்பத்திலேயே வெண்ணிலா !
உருவத்திலே கருப்பு நிலா !
உள்ளத்திலே வெள்ளை நிலா !
நேர்மையிலே தூய்மை நிலா !
சொல்லிலே வாய்மை நிலா !
அறிவிலே தங்க நிலா!
ஆற்றலில் பண்பு நிலா !
எங்களுக்கு அன்பு நிலா !
குழந்தைகளுக்கு பாச நிலா !
அனைவருக்கும் வான் நிலா !
தன் வாழ்நாளெல்லாம் அயராது உழைத்த உழைப்பில்உயர்ந்த பொக்கிஷத்தை , தான் வளர்ந்த வரலாற்றை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு விட்டார் மாமேதை உமாபதி அவர்கள். அம்மணி, கண்ணே,அய்யனே , ராஜா, இனிய அமுதம் தந்தையின் “ரத்தத்தில்” பிறந்தவை ,தந்தையின் அருமைகளும் பெருமைகளும் சாதனைகளும் காலத்தால் அழியாதவை! என்றென்றும் நிலைத்து நிற்கும். தந்தையோடு நாங்கள் வாழ்ந்தநாட்களில் அந்த இனிய காலங்கள் இனி வருமா?.
நினைவுகளோடு; பாரததேவி ஹரி.
எங்கள் தந்தையார் கலைமாமணி டாக்டர் ஜி. உமாபதி அவர்கள் குறித்த எப்போதும் வாழும் இனிய நினைவுகள்
இதயத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் தந்தையார் சொன்ன வார்த்தைகளை மறக்காது நடக்கின்ற எங்களுக்கு, அவரால் செப்பனிட்டு சீரமைத்துக் கொடுத்த பாதையில் அவர் காட்டுகின்ற ஒளியில் எங்களின் வாழ்க்கை பயணம் மகிழ்ச்சியுடன், மன நிறைவுடன் இருக்கிறது.
எங்களின் தந்தையாருக்கு நூற்றாண்டு விழா எடுத்து சிறப்பித்திட, இதுவும் இறைவனின் அருட்கொடையாகவே நாங்கள் கருதுகிறோம். அப்பாவின் நூற்றாண்டு பிறந்தநாள் 05-07-2020 (covid-19) சூழ்நிலையின் காரணமாக ஒத்திவைக்கப் பட்டு, 2020 / 2021 ஆண்டில் ஒரு திருநாளில் நூற்றாண்டு விழாவினை எடுத்து நாம் அனைவரும் ஒன்று கூடி சிறப்பித்து மகிழ்வோம்.
அன்புடன்
உமாபதி பிரகாசம்,
உமாபதி கருணாகரன்,
ஆனந்த் என்கிற உமாபதி பாலசண்முகம்,
பாரததேவி ஹரி
தனலட்சுமி திருஞானம்
மற்றும் குடும்பத்தினர்
Photo Book released on Kalamaamani Dr.G.Umapathy’s 73rd Birthday
Encomiums
மனத்தில் பதிந்தவர் டாக்டர் ஜி. உமாபதி
ஆசிரியர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன்
உயர்ந்த மாமனிதர் உமாபதி புகழ் ஓங்குக
கவிஞர் இரவிபாரதி எம். ஏ., பிஎச்.டி
கலைமாமணி டாக்டர் ஜி. உமாபதி அவர்களின் நூற்றாண்டு விழா
பிரபு RK
கலைமாமணி டாக்டர் ஜி. உமாபதி
- கலைமாமணி ஏர்வாடி எஸ் ராதாகிருஷ்ணன்
ஏர்வாடிஇன் எண்ணத்துளிகள்
உயர்ந்த மாமனிதர் உமாபதி புகழ் ஓங்குக
முனைவர் – கவிஞர் இரவிபாரதி எம். ஏ., பிஎச்.டி
பெருந்தலைவர் காமராஜர் பேரன்பைப் பெற்று
அருந்தலைவர் மபோசியுடன் தமிழ் முரசாய் இணைந்து
நெருக்கமான நண்பராக கலைஞரோடும் எம்ஜிஆரோடும்
நேசமுடன் பழகிய உமாபதி அவர்கள்…!
அச்சுத்தொழில் தன்னில் அடியெடுத்து வைத்து
அல்லும்பகல் பாராது அயராது உழைத்து
மெச்சுகிற வகையில் உயர்ந்து வளர்ந்திட்ட
மேன்மை நாயகர் உமாபதி அவர்கள்…!
அடுத்தவரை மதிக்கின்ற அருங்குணம் கொண்டு
அணுகுமுறைப் பாங்கில் அனைவரையும் வென்று
அடுக்கடுக்காய் சாதனைகள் நிகழ்த்திய மாமனிதர்
ஆல்போல் கிளைவிரித்த உழைப்பின் செல்வர்…!
என்வரிசை எப்போதும் முன்வரிசை என்று
எல்லோரும் போற்றிட இமயமாய் நின்று
நன்முறையில் இல்லறம் நடத்தி வாழ்ந்திட்ட
நாயகரின் புகழை நாளும் போற்றிடுவோம்…!
பத்திரிகை ஆசிரியர் பண்பான எழுத்தாளர்
பாங்குறப் பேசுகிற மேடைப் பொழிவாளர்
முத்தான நடிப்பிலும் ஒளிவீசி நின்று
முத்திரை பதித்தவரரின் புகழோங்கச் செய்திடுவோம்…!
திரையுலகில் மட்டுமல்ல திரையரங்க உலகிலும்
திருப்புமுனை ஏற்படுத்திய சாதனை யாளர்…!
நிர்வாகத் திறமையிலும் நேரத்தின் அருமையிலும்
நிமிர்ந்து நிற்கின்ற நன்னெறி யாளர்…!
ஒரு நூறு ஆண்டுகள் கடந்து மணக்கும்
ஒப்பற்ற கலைமாமணி உமாபதி பிறந்த நாளை
மறவாமல் கொண்டாடி மகிழ்ந்திடுவோம்…!
மாமனிதர் நினைவுகளில் நனைந்திடுவோம்…!
கலைமாமணி டாக்டர் ஜி. உமாபதி அவர்களின் நூற்றாண்டு விழா
05-07-2020
(1920 – 1995)
பிரபு RK
அன்போடு அரவணைக்கும் அன்னை என அவர் வாழ்ந்தார்!
ஆற்றல்மிகு உழைப்பும் அயராத மனத்துணிவும் ஏற்றமிகு வாழ்க்கைக்கு அதுவே உரமாகும் என்றுரைப்பார்.
கற்றோர் தம் கூட்டத்தில் தனித்துத் தெரிவார்.
கவியூணர்வு காவிய சிறப்பு அனைத்தும் அவரறிவார்.
தமிழுணர்வை தன்னகத்தே இருத்திக் கொண்டார்!
தமிழ் மொழியின் சொல் அழகில் நெகிழ்ந்தே போவார்!
நல்லோரும் நாட்டோரும், வியந்து பேச, நற்பணிகள், பொதுப்பணிகள், நிறைந்தே செய்வார்!
தேசத்தை, தேசியத்தை போற்றி வாழ்ந்தார்!
அரசியல் வழி செயல்பாடுகள் அனைத்தும் அவர் தலைவர் கர்மவீரர் காமராஜர் பாதை ஒன்றே என்பார்
கவிக்கழகாய், மொழிக்கழகாய் சிறக்க வாழ்ந்த சிலம்புச் செல்வர் வழக்கு மொழி உயர்ந்தது என்பார்!
அருட்செல்வம், பொருட்செல்வம் அனைத்தும் பெற்றார்!
அவர் பெயர் சொல்லும் நன்மக்கட்செல்வங்கள் நிறைவாய்ப் பெற்றார்!
தன்மானம், தன்னம்பிக்கை, தளராமுயற்சி – இவையனைத்தும் வளரும் சந்ததிக்கு வாழ்க்கைத்துணை என்பார்!
பெற்றோரின், பெரியோரின் நினைவைப் போற்றி – நற்செயல்கள் நலன் காண தினம் உழைப்பார்!
நாடு வாழ, நலிந்தோர் நலன்காண துணிவுடனே துணை நிற்பார்!
வான் புகழும், வள்ளுவர் தம் குறள்வழிப் பற்றி, நற்செயல்கள் பல செய்தார் – நலமே கண்டார்!
நாடு போற்ற வாழ்ந்தவர்கள் சரித்திரப் பதிவில் வாழ்கின்றார் உமாபதி எனும் சீராளர்.
எங்கள் சிந்தையெல்லாம் நிறைந்து வாழும் பெருங்குணத்தோன்
இன்னும்பல நூற்றாண்டுகள் அவர் புகழ் வாழ்க வாழ்கவே!
கலைமாமணி டாக்டர் ஜி உமாபதி –
கலைமாமணி ஏர்வாடி எஸ் ராதாகிருஷ்ணன்
ஏர்வாடிஇன் எண்ணத்துளிகள்
உமாபதி…,
ஊரறிந்தவர்; உலகறிந்தவர்
என்பதற்கெல்லாம் அப்பால்
பலரது உள்ளம்றிந்தவர்;
எல்லோரது உள்ளமும் நிறைந்தவர்.
அடுத்தவர் உழைப்பில்
அன்றாடம் உலாவோர் நடுவே
தன்நுழைப்பால் தாநுயர்ந்தவர்.
ஒருபோதும் நெஞ்சம்
தளர்ந்ததில்லை என்பதே இவர்
வானலால் இங்கே
வளர்ந்ததற்கு காரணம்.
எல்லோரையும் போலவே
என்மீது இவருக்கு எப்போதும் அன்பு,
இவர் மீதும் எனக்கு இருக்கிறது அப்பண்பு.
நான் யாரிடமும்
குழைவதில்லை ஆனால்
இழைந்துவிடுவேன்
ஒவ்வொரு நட்பு நேசலிலும்
நாலைந்து நூல்களலானது
நானாக இருப்பேன்
அணிந்து கொள்வோருக்கு
என் அன்பு அலாதி சுகம்.
எப்போதும் உமாபதி
என்னை தம்பி என்றுதான் அழைப்பார்,
ஒரு முறையில் பார்த்தால்
இளம்பாரிக்கு நான்
சித்தப்பா உறவு…
சொத்து சுகத்தில்
கொஞ்சம் சித்தப்பாவுக்குத்தந்தால்
அந்த பெத்தப்பாவுக்குப்
பெரிய மகிழ்ச்சி.
உமாபதி யாருக்கு
ஒளிவுமறைவு இல்லை
உள்ளத்தில் ஓர் தெளிவு!
நெளிவு சூழல் அறிந்த
நெஞ்சத்தில் ஓர் நிறைவு!
பொருள் குவித்த வாழ்க்கை
பொருள் பொதிந்த வார்த்தை
இவற்றுக்கும் இருப்பிடம்
எங்கள் உமாபதி யார்.
எழுத்தாளர் சங்கம்தான
எங்களைச் சேர்ந்தது
விக்ரமன் வழங்கிய வரம் இது
சேர்ந்த பிறகு ஒரு நாள்
இத்தனை நாள்களாய்
தெரியாமல் இருந்தேனே… உன்னை
அறியாது இருந்தேனே
என்று ஆதங்கம் சொன்னார
அந்நாளில்
அய்யாவும் நானும்
அனைத்து இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தில்
கலக்கினோம் – கொஞ்சம்
உ லுக்கினோம்.
சங்கம் வளர்வதற்கு எங்கள்
பங்கும் இருந்தது.
அப்போது வளர்ச்சி வேறு
இப்போது வளர்ச்சி வேறு.
அப்போதோ ஒரே ஒரு சங்கம்
இப்போதோ ஒரே தங்கமயம்…
ஒன்றாய் இருந்தது இப்போது
மூன்றாய் இருக்கிறது.
யாருக்குத் தலைவராக ஆசையோ
ஆளுக்கொன்றாய்
அமைத்துக்கொள்ளலாம்.
எழுத்தாளர்களுக்கு எங்கு போவது
என்ற கவலை யாருக்கும் வேண்டாம.
அரிமா சங்கத்தில்
அரிமாவா உறுப்பினர்.?
எழுத்தாளர் இல்லாமலும்
எழுத்தாளர் சங்கம் அமைக்கலாம்
எழுதாமல்கூட எழுத்தாளர் ஆகலாம்.
உமாபதி இல்லை என்பதால்
எல்லோருக்கும் குளிர் விட்டுப் போய்விட்டது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சங்கம் என்று
துளிர் விட்டுப் போயிற்று.
அய்யா உமாபதி
அற்புத எழுத்தாளர்
உமா என்கிற
உயர்ந்த இதழில்
எழுதி குவித்த
எழுத்துச் சித்தர்.
தமிழை வளர்க்கவும்
தமிழனை வளர்க்கவும்
தினமும் நினைத்த
தேசியத்தலைவர்.
வாழ்க்கையில் நடிக்கத்
தெரியாத மனிதன்
வெள்ளித்திரையில்லோர்
வேடம் ஏற்றார்.
அதில்
நடித்தார் என்பதே தவறு.
வந்து போனார்… ஏற்ற வேடத்தில்
வாழ்ந்து போனார்.
சினிமா இவருக்குப்
புகழ் தரவில்லை. அந்த
சினிமா இவரால்
புகழ் பார்த்துக்கொண்டது.
உமாபதி!
உயர்ந்த மனிதர்
உன்னத மனிதர்
பயமேதும் அறியாத
பண்பு மனிதர்
வியர்வைத் துளிகளுக்கு
விலாசம் தந்தவர்.
அயர்விலாத
அற்புத மனிதர்
அன்பருக் கெல்லாம்
அன்பு மனிதர்.
இன்னும் பல நாள்
வாழ்ந்திருக்க வேண்டும்…
இல்லையென்றால்
இன்னும் பல்லாண்டு
இவர் புகழ் வாழுமே!